கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது


கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது
x
தினத்தந்தி 3 April 2022 7:54 PM IST (Updated: 3 April 2022 7:54 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது


கோவை

கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. அதை 3 கட்டமாக நிறைவேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

மெட்ரோ ரெயில் திட்டம்

இந்தியாவில் 19 இரண்டாம் நிலை நகரங்களில் (டையர்-2 சிட்டி) மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2011-ம் ஆண்டு மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. 

இதில் தமிழகத்தில் கோவை இடம் பெற்றது. கேரளா மாநிலம் கொச்சி உள்பட சில இடங்களில் இந்த மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

ஆனால் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த ஆய்வு பணிகள் மிகவும் மந்தகதியில் இருந்தது. 

கடந்த 2011-ம் ஆண்டு முதல் கோவையில் தற்போது பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு விட்டன. 

எனவே மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் இருந்தது.

திட்ட அறிக்கை

இது குறித்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி னார். 

அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், கோவையில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஆயத்த பணிகளை தொடங்கியது.

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில் மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த முதல் ஆலோ சனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி நடந்தது. 

இதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் பிரதீப் யாதவ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்ட வழித்தடங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. 

முதற்கட்ட பணிகள் குறித்து விளக்கப்படமும் காட்டப்பட்டது.

அதன்படி கோவையில் 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 கட்டங் களாக மெட்ரோ ரெயில் பாதை  அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. 

முதற் கட்டமாக அவினாசி ரோடு நீலாம்பூர் முதல் வெள்ளலூர் வரை மற்றும் சத்தி ரோட்டில் வழியம்பாளையம் முதல் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம்   வரை 44 கிலோ மீட்டர் தூரத்துக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக திருச்சி ரோடு-பாப்பம்பட்டி பிரிவு முதல் கோவை ரெயில் நிலையம் முதல் வரை மற்றும் 
மேட்டுப்பாளையம் ரோடு பெரிய நாயக்கன்பாளையம் முதல், கோவை ரெயில் நிலையம் முதல் வரையும் 3-ம் கட்டமாக கோவை ரெயில் நிலையம் முதல் காருண்யா நகர் வரையும் செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திருத்தம் செய்யப்படும்

மெட்ரோ ரெயில் முதல்கட்ட திட்டத்தில் 40 இடங்களில் ரெயில் நிறுத்தங்கள் அமைய உள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் இந்த திட்டத்தை முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை பொதுமக்கள் மற்றும் தொழில் அமைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஆட்சேபங்கள், ஆலோசனைகள் பெறப்பட்டு, தேவைப்பட்டால் திருத்தம் செய்யப்படும். 

அதன்பின்னர் நிதி பெறுவதற்கான முயற்சி எடுக்கப்படும் என்று மெட்ரோ திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story