மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாத சுமை என்று பொதுமக்கள் கூறினர்
மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாத சுமை என்று பொதுமக்கள் கூறினர்
கோவை
மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாத சுமை என்று பொதுமக்கள் கூறினர்.
மருந்துகள் விலை உயர்வு
இந்தியாவில் மக்கள் பயன்படுத்தும் மருந்துகளின் விலையை இந்திய தேசிய மருந்து பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் வரைமுறை செய்கிறது.
அதன்படி கடந்த 2018-க்கு பிறகு தற்போது பாரசிட்டமால் உள்பட அத்தியாவசிய மாத்திரைகளின் விலையை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து நிர்ணயித்து உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது
பீளமேடு தனியார் நிறுவன ஊழியர் சுப்பிரமணியன்
நீரிழிவு, இதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். அவர்களால் மருந்துகளின் விலை உயர்வை தாங்க முடியாது.
டாக்டர் எழுதி கொடுத்த மருந்துக ளை நம் இஷ்டத்துக்கு குறைக்க முடியாது. அதை வாங்கி சாப் பிட்டால் தான் உயிர்வாழ முடியும்.
நான் 15 நாட்களுக்கு ஒரு முறை மருந்து வாங்குவேன். அடுத்த முறை மருந்து வாங்கும் போது தான் விலை எவ்வளவு கூடி உள்ளது என்பது தெரியவரும்.
பட்ஜெட்டில் பற்றாக்குறை
குடும்பத்தலைவி ராணி
கணவருக்கு இதய பாதிப்பும், எனக்கு ரத்த அழுத்த பிரச்சினை யும் உள்ளது. நாங்கள் மாதந்தோறும் ரூ.2500 வரை மருந்து வாங் குகிறோம்.
மருந்து விலை இன்னும் அதிகரித்தால் எப்படி சமா ளிப்பது என்று தெரிய வில்லை. எங்களின் வீட்டு பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரித்து விடும்
ஆசிரியை ஜெயந்தி
வீட்டில் பெரியவர்களுக்கு மருந்து மாத்திரைதான் உயிரை காப்பாற்றுகிறது. எனவே மருந்து விலை உயர்ந்ததால் மற்ற செலவை தான் குறைக்க வேண்டும்.
எனவே மத்திய அரசின் மருந்தகங்களில் அனைத்து மருந்துகளையும் இருப்பு வைத்த சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவு பகலாக வேலை
காந்திபுரம் ஆட்டோ டிரைவர் ஆறுமுகம்
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், கியாஸ், சுங்க கட்ட ணம் என்று விலை உயர்ந்து கொண்டே போகிறது.
தற்போது மருந்துகளின் விலை உயர்ந்து விட்டதால் அன்றாட செலவுகளை சமாளிக்கவே மக்கள் திணற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர படிகள் கூடுகிறது.
ஆனால் தனியார் துறை மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வருமானம் கூடுவது இல்லை.
எனவே இரவு, பகலாக பாடுபட்டு வேலை செய்தால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்ற நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story