கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தை 550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டவரைவு தயாரிக்கப் பட்டு உள்ளது.
கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தை 550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டவரைவு தயாரிக்கப் பட்டு உள்ளது
கோவை
கோவை -அவினாசி ரோடு மேம்பாலத்தை ரூ.550 கோடி செலவில் நீலாம்பூர் வரை நீட்டிக்க திட்டவரைவு தயாரிக்கப் பட்டு உள்ளது.
அவினாசி ரோடு மேம்பாலம்
கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து கோல்டுவின்ஸ் வரை ரூ.1,650 கோடி செலவில் 10.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
இந்த மேம்பாலத்தில், அண்ணா சிலை, ஹோப் கல்லூரி, விமான நிலையம், நவஇந்தியா பகுதியில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்படுகிறது.
இந்த மேம்பால பணி குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது
கோவை- அவினாசிரோடு மேம்பாலத்துக்காக மொத்தம் 306 தாங்கு தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவரை 263 தாங்கு தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
போக்குவரத்து நிறைந்த ஹோப்கல்லூரி, பன்மால், எஸ்.ஓ.பங்க், பி.எஸ்.ஜி. கல்லூரி சிக்னல், நவஇந்தியா சிக்னல், லட்சுமி மில் சிக்னல், அண்ணா சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 18 தாங்கு தூண்கள் அமைக்க வேண்டியது உள்ளது.
பணிகள் தாமதம்
ஒவ்வொரு சிக்னல் பகுதியிலும் தாங்கு தூண்கள் அமைக்கும் போது, அங்கிருந்து சற்று தள்ளி தலா ரூ.2 லட்சம் செலவில் சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத் துறை தயாராக உள்ளது.
ஆனலும் போக்குவரத்து இன்னும் மாற்றி அமைக்கப்பட வில்லை. இதனால் தாங்கு தூண்கள் அமைக்கும் பணிகள் தாமதமாகி வருகின்றன.
தற்போது விமானநிலையம் அருகில் தாங்கு தூண்கள் மீது லாஞ்சர் பொருத்தப்பட்டு மேம்பால பக்கவாட்டு தளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேம்பாலத்துக்கா கான்கிரீட் தளங்கள் தென்னம்பாளையம் பகுதியில் தயார் செய்யப்படுகிறது. பின்னர் அவை அங்கிருந்து கொண்டு வரப்பட்டு பொக்லைன் மூலம் பொருத்தப்படுகிறது.
5 கிலோ மீட்டர் நீட்டிப்பு
கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து ரூ.550 கோடி செலவில் மேலும் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவினாசி ரோடு மேம் பாலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
அதற்கான திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
அதற்கு அரசு அனுமதி அளித்த உடன் நீலாம்பூர் வரை மேம்பாலத்தை நீட்டிக்கும் பணியும் நடைபெறும்.
இதன் மூலம் அவினாசி ரோட்டில் எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை உருவாகும்.
மேம்பால பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story