மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன

மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன
x
தினத்தந்தி 3 April 2022 8:03 PM IST (Updated: 3 April 2022 8:03 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன

கோவை

சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில்  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோவை அவினாசி சாலை மேம்பாலம், புரூக்பாண்ட் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. 

அதில், கடந்த 2014-ம் ஆண்டு ரூ.410-ஆக இருந்த சிலிண்டர் விலை தொடர்ந்து ஏற்றம் அடைந்து 2022-ம் ஆண்டில் ரூ.980 ஆகி உள்ளது. 

விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும்... இல்லத்தரசிகள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Next Story