சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்


சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்
x
தினத்தந்தி 3 April 2022 8:18 PM IST (Updated: 4 April 2022 12:29 PM IST)
t-max-icont-min-icon

சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்

வடவள்ளி,

கோவை வடவள்ளியை அடுத்து வீரகேரளம் உள்ளது. இப்பகுதிக்கு மருதமலை தேவஸ்தான பள்ளி எதிர்புறத்தில் உள்ள சாலை வழியாகவும்,  முல்லை நகர் போலீஸ் சோதனை சாவடியை கடந்து இடதுபுறத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாலத்தின் வழியாகவும் செல்ல முடியும். 

பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் அந்த பாலம் பழுதடைந்து காணப்படுகிறது.  இதன் வழியாக வீரகேரளம், தென்றல்நகர், சிவகாமி நகர், ஹவுசிங் யூனிட் சிறுவாணி சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். 

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அதிகரித்து உள்ளது. ஒரே நேரத்தில் 2 வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு குறுக லாக உள்ளது. இதன் காரணமாக ஒரு வாகனம் வரும் போது எதிரே வரும் வாகனம் நின்று தான் வர வேண்டியது இருக்கிறது. 

மேலும் அந்த பாலத்தில் செல்லும் சாலை குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக வருபவர் கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த பாலத்தின் வழியாக வேடபட்டி, தொண்டாமுத்தூர் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். எனவே போக்குவரத்து அதிகமாக உள்ளது. 

ஆனால் பாலம் குறுகலாக மோசமான நிலையில் காணப்படுகிறது. சீரமைத்து அகலப்படுத்தாத வரை பாலத்தின் அவலம் தொடரும் என்று வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே பாலத்தை அகலப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story