கட்டிட தொழிலாளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்


கட்டிட தொழிலாளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
x
தினத்தந்தி 3 April 2022 8:21 PM IST (Updated: 3 April 2022 8:21 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்


கணபதி

கோவை ரத்தினபுரி கக்கன் வீதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 34). கட்டிட தொழிலாளி. 

இவருடைய மனைவி விஜய குமாரி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகன் உள்ளனர். 

இந்த நிலையில், விஜயகுமாரிக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அது நாளடைவில் கள்ளக்காத லாக மாறியது.

 இதனால் கணவர் இல்லாத நேரத்தில் விஜய குமாரி தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

இதை அறிந்த மோகன்ராஜ், தனது மனைவியிடம் கள்ளக்காத லை கைவிடும்படி கூறி கண்டித்துள்ளார். 

இதனால் அவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

இந்த நிலையில், விஜய குமாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளி யேறி தனது கள்ளக்காதலனுடன் சென்று விட்டார். 

 இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மோகன்ராஜ் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதை அறிந்த ரத்தின புரி போலீசார் விரைந்து வந்து மோகன்ராஜின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story