நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது


நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது
x
தினத்தந்தி 3 April 2022 9:48 PM IST (Updated: 3 April 2022 9:48 PM IST)
t-max-icont-min-icon

நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று சபாநாயகர் காகேரி தெரிவித்துள்ளார்

மங்களூரு:

 நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது என்று சபாநாயகர் காகேரி தெரிவித்துள்ளார்.

 தேர்தல் சீர்திருத்தம் 
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் டவுன் ஹாலில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சபாநாயகர் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
அப்போது அவர் பேசியதாவது:- சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் நாடு பல சாதனைகளை படைத்துள்ளது.டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கி நாடு முன்னேற்றப் பாதைக்கு செல்ல பெரும் உதவி செய்துள்ளார். 

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை. தற்போது அனைத்து துறைகளிலும் தார்மீகம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதனால் சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கு அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வரும். மக்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

 விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வாக்களிப்பது ஜனநாயக கடமை. நமது ஓட்டுகள் விற்பனைக்கு அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையம் ஓட்டுரிமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணத்திற்காகவும், மதுபானத்திற்காகவும் நமது வாக்குகளை விற்பது சரியல்ல. நாட்டின் எதிர்காலத்தில் இளைஞர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதனை இளைஞர்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா
மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி குமார், வேதவியாச காமத் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story