ஊரக இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி


ஊரக இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 3 April 2022 9:50 PM IST (Updated: 3 April 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

விதை சான்றளிப்பு துறை மூலம் ஊரக இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம், 

திண்டிவனத்தில் உள்ள உழவர் பயிற்சி நிலையம் மூலம் ஊரக இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து 25 விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விதைப்பண்ணை பதிவு செய்யும் முறை, வயல் ஆய்வு மேற்கொள்ளுதல், சான்று அட்டை பொருத்துதல் பற்றியும், அங்கக சான்றளிப்புக்கு விண்ணப்பிக்கும் முறை, சாகுபடி மேலாண்மை மேற்கொள்ளுதல் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் ரமணன் தலைமை தாங்கினார். 

உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குனர் குமாரி ஆனந்தி கலந்துகொண்டு பேசினார். உழவர் பயிற்சி நிலைய வேளாண் அலுவலர் ஜாய்சின்சமீதா வரவேற்றார். இதில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன், விதைச்சான்று அலுவலர்கள் கனகராஜ், விஜயா, அங்ககச்சான்று ஆய்வாளர் லாவண்யா ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

Next Story