திருத்தணி ரெயில்நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்
திருத்தணி ரெயில்நிலையத்தில் 14 கிலோ கஞ்சாவை அரக்கோணம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் அரக்கோணம், திருத்தணி மார்க்கமாக வந்து செல்லும் அனைத்து ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று அதிகாலை 5.35 மணியளவில் ஆந்திர மாநிலம் காச்சிகுடாவில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருத்தணி ரெயில் நிலையத்துக்கு வந்து 3-வது நடைமேடையில் நின்றது.
அதில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் மற்றும் போலீசார் கிருஷ்ணகுமார், அரவிந்த் ஆகியோர் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர்.
கடைசி பொதுப்பெட்டியில் கழிவறை ஓரம் கேட்பாரற்றுக்கிடந்த 2 பைகளை திறந்து பார்த்தனர். அதில் மொத்தம் 14 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிந்தது. இரு பைகளுடன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story