பேரணாம்பட்டு அருகே கிணற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி


பேரணாம்பட்டு அருகே கிணற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலி
x

பேரணாம்பட்டு அருகே கிணற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே கிணற்றில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.

குளிக்க சென்றார்

பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகர் புது ஷாப் லைன் பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் பெருமாள் (வயது 18) கட்டிடத் தொழிலாளி.  அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் அரவட்லா மலை கொத்தூர் கிராமத்தில் உள்ள கோவிந்தசாமி என்பவர்க்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது பெருமாளுக்கு நீச்சல் தெரியாததால்  கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கினார் உள்ளார்.

இதை பார்த்ததும் உடனிருந்த நண்பர்கள் பெருமாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர்கள் கூச்சலிட்டனர். அதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் பேரணாம்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து சென்றனர்.  

பிணமாக மீட்பு

கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றி, சுமார் 4 மணி நேரம் போராடி  பெருமாளை பிணமாக மீட்டனர். பின்னர் பெருமாள் உடல் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story