வீட்டின் முன்பு காலி மதுபான பெட்டிகள் கிடந்ததால் பரபரப்பு


வீட்டின் முன்பு காலி மதுபான பெட்டிகள் கிடந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 April 2022 9:57 PM IST (Updated: 3 April 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

வீட்டின் முன்பு காலி மதுபான பெட்டிகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

 சீர்காழி
 சீர்காழி ஈசானிய தெரு அமிர்தலிங்கம் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவரது வீட்டின் முன்பு நேற்று முன்தினம் அதிகாலை இரண்டு அட்டைப்பெட்டிகள் கேட்பாரற்று கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அட்டைப்பெட்டியில் வெடிகுண்டுகள் இருக்குமோ? என நினைத்து சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் முன்பு கிடந்த 2 அட்டைப்பெட்டிகளையும் பார்வையிட்டனர். பின்னர் அந்த அட்டைப்பெட்டிகளில் பாதுகாப்பாக சோதனை மேற்கொண்டபோது அதில் காலி மதுபான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த காலி மதுபான பெட்டிகளை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது, ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வந்து முருகேசன் வீட்டின் முன்பு 2 அட்டைப்பெட்டிகளையும் வைத்து விட்டு சென்றது பதிவாகியிருந்தது. அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story