பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 April 2022 12:02 AM IST (Updated: 4 April 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் கிராமக் கோவில் பூசாரிகள் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட அமைப்பாளர் கோவிந்த்ஜி வரவேற்றார். 

விஸ்வ ஹிந்து பரிசத் மாநில இணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார், கோவை கோட்ட பொறுப்பாளர் ஜெகநாதன், திருப்பூர் கோட்ட பொறுப்பாளர் சின்னக்குமரவேல் ஆகியோர் பேசினார்கள். 

மாநில பொதுச்செயலாளர் சோமசுந்தரம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில், வயது முதிர்ந்த கிராம கோவில் பூசாரிகள் ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில்இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும். 

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமகோவில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள கிராம கோவில் பூசாரிகள் நல வாரியத்தை உடனடியாக செம்மைப்படுத்தி செயல்பட வைக்க வேண்டும்.

 நலவாரியம் சலுகைகளை அனைத்துப்பூசாரிகளுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கோவில்களுக்கு அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்பட உள்ளது. 

இக்குழுவில் பூஜை செய்யும் பூசாரி ஒருவரையும் சேர்க்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் கிராம கோவில் பூசாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story