சாலை வசதி செய்யக்கோரி ரோடு ரோலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
சாலை வசதி செய்யக்கோரி ரோடு ரோலரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அடுத்த மாக்கினாம்பட்டி பகுதியில் பாஸ்கர் நகர், வஞ்சி அம்மாள் லே-அவுட் பகுதியில் நீண்ட நாட்களாக சாலைகள் அமைத்து தரப்படாமல் இருந்து வந்தது.
இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அப்போது, ஊராட்சி நிர்வாகம் சார்பில், விரைவில் சாலை வசதி அமைத்துத் தரப்படும். என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் இதுவரை அங்கு தார் சாலை வசதி அமைத்துக்கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு ஜல்லி கற்கள் மட்டும் கொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தற்காலிக சாலை அமைக்க வந்த ரோடு ரோலரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், விரைவில் நிதி பெற்று சாலை பணிகள் செய்து முடிக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story