தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 April 2022 12:14 AM IST (Updated: 4 April 2022 12:14 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

வீணாகும் குப்பைத்தொட்டிகள் 

கோத்தகிரி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து வாங்க, ஏராளமான குப்பை தொட்டிகள் மாவட்ட நிர்வாகத்தால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன. ஆனால் சில குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் கோத்தகிரியில் இருந்து டானிங்டன் செல்லும் சாலையில் வைக்கப்பட்டு உள்ளன. எத்தனையோ இடங்களில் குப்பை தொட்டி இல்லாமல் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசுகிறது. இந்த இடங்களில் இந்த குப்பை தொட்டிகளை வைத்தால் உதவியாக இருக்கும். அதற்கு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜு, கோத்தகிரி.

சீரமைக்கப்படாத சாலை

  பொள்ளாச்சி ஆறுமுகம் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க ரோடு தோண்டப்பட்டது. ஆனால் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அங்கு சாலை குண்டும் குழியுமாய் படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சீரமைக்கப்படாத இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  கலில் இப்ராகீம், பொள்ளாச்சி.

குப்பை தொட்டியால் பாதிப்பு

  கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன்பு செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க இந்த பள்ளியின் முன்பு சாலையை அடைத்தபடி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் எதிர்ப்புறத்தில் பொதுக்கழிப்பிட சுவர் சாலையை அடைத்து கொண்டு இருக்க, தற்போது குப்பை தொட்டிகளும் சாலையில் வைக்கப்பட்டு உள்ளதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து இந்த குப்பை தொட்டிகளை மாற்றி அமைக்க வேண்டும்.
  ஷெரீப், குனியமுத்தூர்.

கற்கள் தேங்கிய ரோடு

  கோவை குறிச்சி சிட்கோ தொழிற்சாலை பகுதியில் புதிதாக தார்சாலை போடப்பட்டு உள்ளது. இந்த சாலை பழுதடைந்து கற்கள் மற்றும் தார் தனித்தனியாக பிரிந்த இருக்கிறது. தரமற்ற முறையில் இந்த சாலை போடப்பட்டு உள்ளதால், கற்கள் அதிகளவில் தேங்கி இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனேவ இங்கு விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  ராமலிங்கம், சுந்தராபுரம். 

சாக்கடை கால்வாயில் அடைப்பு

  கோவை மாநகராட்சி 33-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம் பாளையம் ராமகுட்டி லே-அவுட் பகுதியில் கழிவுநீர் செல்ல சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சாக்கடையில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
  ராஜராஜேந்திரன், கவுண்டம்பாளையம்.

நிழற்குடை வசதி இல்லை

  கோவையை அடுத்த கருமத்தம்பட்டி நால்ரோட்டில் உள்ள பஸ்நிறுத்தத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கு வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் இந்த பகுதியில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் காலத்தில் வெயிலில் காய்ந்தபடி நிற்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் நிழலை தேடி கடைகளில் ஒதுங்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு உடனடியாக நிழற்குடை வசதி செய்து கொடுக்க வேண்டும்.
  கனிஷ்கா பாண்டியன், சோமனூர்.

திறக்கப்படாத கழிவறை

  நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால் இங்கு நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம் இன்னும் திறக்கப்படாமல் மூடியே இருக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் இங்கு வரும் பயணிகள் கழிவறை செல்ல முடியாமல் பெரிதும் அவதியடைநந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும்.
  கந்தசாமி, கூடலூர்.

சாக்கடை கால்வாய் இல்லை

  கிணத்துக்கடவு ஒன்றியம், செட்டியக்காபாளையம் கிராமத்தில் உள்ள மேற்கு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டோரம் செல்கிறது. மேலும் மழை காலங்களில் அதிகளவில் தண்ணீர் வரும் போது ரோட்டில் செல்கிறது. இதனால் அவ்வழியே செல்லும் போது தூர் நாற்றம் வீசுவதுடன், கழிவு நீர் பாதசாரிகள் மீது தெரிக்கிறது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுது்து இந்த கிராமத்தில் உடனடியாக கழிவுநீர் செல்லும் பாதையில் சாக்கடை கால்வாய் அமைத்து தர வேண்டும்.
  ரித்தீஷ், செட்டியக்காபாளையம்.

வேகத்தடை வேண்டும்

  கோவை கிணத்துக்டகவு அருகே உள்ள வடபுதூரில் இருந்து கல்லாபுரம் செல்லும் வழியில் உள்ள மூன்று ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இ்ங்கு ஒரு பகுதியில் மட்டும்தான் வேகத்தடை உள்ளது. மற்ற 2 இடங்களில் வேகத்தடை இல்லை. இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடை இல்லாத இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
  கனகராஜ்,வடபுதூர்.
  
  


Next Story