கிண்டி நட்சத்திர ஓட்டலில் இரும்பு ‘கேட்’ மீது காரை மோத விட்ட கல்லூரி மாணவர்


கிண்டி நட்சத்திர ஓட்டலில் இரும்பு ‘கேட்’ மீது காரை மோத விட்ட கல்லூரி மாணவர்
x
தினத்தந்தி 4 April 2022 7:37 PM IST (Updated: 4 April 2022 7:37 PM IST)
t-max-icont-min-icon

கிண்டி நட்சத்திர ஓட்டலில் மது அருந்த அனுமதி மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் காரை வேகமாக எடுத்து கொண்டு வெளியே வந்த போது, அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது மோதினார்.

சென்னை கிண்டி கத்திப்பாராவில் அமைந்துள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு இளைஞர் ஒருவர் காரில் வந்தார். அவர் ஓட்டலில் உள்ள மதுபான பாருக்கு சென்ற போது, அங்கிருந்த ஊழியர்கள் வயதை காரணம் காட்டி மது அருந்த அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், காரை வேகமாக எடுத்து கொண்டு வெளியே வந்த போது, அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது மோதினார். இதில் காரில் சிக்கிய இரும்பு கேட்டோடு சாலையின் நடுவே சென்று நிறுத்தினார். இதனால் மீனம்பாக்கம் நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயமடைந்து காரில் இருந்த சென்னை முகப்பேரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ் (19) என்பவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இரும்பு கேட்டுடன் சிக்கி இருந்த காரை பொக்லைன் உதவியுடன் அகற்றினர்.


Next Story