ரூ.8 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு


ரூ.8 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2022 12:15 AM IST (Updated: 5 April 2022 7:45 PM IST)
t-max-icont-min-icon

வாஞ்சூர் கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் நடந்த சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

வடுவூர்:-

வாஞ்சூர் கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் நடந்த சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

சிமெண்டு சாலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் ராமபுரம் ஊராட்சி வாஞ்சூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. 
இதை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு சாலையின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

கிராமப்புற சாலைகளை மேம்படுத்துவதற்கும், குடிநீர், குடியிருப்பு வீடுகள், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு உண்டான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
அதன்படி மன்னார்குடி ஒன்றியம், ராமபுரம் ஊராட்சி வாஞ்சூர் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு பணிகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு விதிமுறைக்கு உட்பட்டு அளவீடுகள் செய்யப்பட்டுள்ளதா? முறையாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். 
ஆய்வின்போது மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story