மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும்- ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும்- ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு
x
தினத்தந்தி 6 April 2022 12:15 AM IST (Updated: 5 April 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

திருவாரூர்:-

மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியது.

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், மாவட்ட செயலாளர் பாவாடையராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா கலந்து பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்

ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்துவதில் வேலைக்கான ஒப்பந்தத்தை ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும். ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பணி தள பொறுப்பளார்களை ஊராட்சியின் தீர்மான அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள வேண்டும். 
மாநில நிதிக்குழு மானிய நிதியை இனி வரும் காலங்களில் ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story