காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்


காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 6 April 2022 12:30 AM IST (Updated: 5 April 2022 9:57 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.

முத்துப்பேட்டை:-

முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர பொறுப்பாளர்கள் மெட்ரோ மாலிக், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொதுச்செயலாளர் அன்பு வீரமணி, வட்டார தலைவர்கள் மேற்கு ரெங்கசாமி, கிழக்கு வடுகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் நெய்னா முகமது, மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சட்டமன்ற பொறுப்பாளர் அன்வர்தீன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நபீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story