காரைக்கால்-பெங்களூரு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்


காரைக்கால்-பெங்களூரு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2022 9:58 PM IST (Updated: 5 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால்-பெங்களூரு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னசேலம், 

சின்னசேலம் வழியாக காரைக்கால் -பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் 2 விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனை சின்னசேலம் மற்றும் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில் ஒன்று மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மற்றொன்று இயக்கப்படாமல் உள்ளது. மேலும் காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பயணிகள் சேலம், விருத்தாசலம், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க ரெயில்வே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story