குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 April 2022 9:58 PM IST (Updated: 5 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

மேல்பாடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

திருவலம்

வேலூர் மாவட்டம், மேல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இன்று மேல்பாடி பஸ் நிறுத்தம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேல்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
----

Next Story