ஆனைமலை ஏல மையத்துக்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு


ஆனைமலை ஏல மையத்துக்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 April 2022 10:51 PM IST (Updated: 5 April 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை ஏல மையத்துக்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கிலோவுக்கு ரூ.6 விலை குறைந்தது.

பொள்ளாச்சி

ஆனைமலை ஏல மையத்துக்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக கிலோவுக்கு ரூ.6 விலை குறைந்தது.

கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. 

ஏலத்திற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது. நெகமம், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் கொப்பரை தேங்காய்களை ஏலம் எடுத்தனர். 

கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-

வரத்து அதிகரிப்பு

ஆனைமலையில் நடந்த ஏலத்திற்கு 147 விவசாயிகள் 889 மூட்டை கொப்பரை தேங்காயை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். 470 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.85 முதல் ரூ.88.50 வரை, 419 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.77.50 முதல் ரூ.82 வரையும் ஏலம் போனது.

 கடந்த வாரத்தை விட 113 மூட்டை வரத்து அதிகரித்து இருந்தது. மேலும் வரத்து அதிகரித்ததால் கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.6 விலை குறைந்தது. கடந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததால் தேங்காய் விளைச்சல் அதிகமாக உள்ளது. 

இதனால் ஏலத்திற்கு கொப்பரை தேங்காய் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு பிறகு  அதிகமாக கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story