செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கோலப்போட்டி
செஞ்சேரிப்புத்தூர் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு கோலப்போட்டி நடந்தது.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிப்புத்தூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக உங்கள் திறமை உங்களிடமே என்னும் தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கதை, கட்டுரை, கவிதை, பேச்சு, எழுத்து, ஓவியம், திருக்குறள் ஒப்புவித்தல் என தினமும் ஒரு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாணவிகளுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் இங்கு படித்து வரும் மாணவிகள் கலந்து கொண்டு பல வண்ணத்தில் கோலங்கள் போட்டு அசத்தினார்கள். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மகரஜோதி கணேசன் கூறும்போது, மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் கடந்த ஒரு மாதமாக பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பணிகள், கலாசாரம் குறித்து தெரிந்து கொள்ள இதுபோன்று நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story