வால்பாறை அருகே வனத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி


வால்பாறை அருகே வனத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி
x
தினத்தந்தி 5 April 2022 11:02 PM IST (Updated: 5 April 2022 11:02 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே வனத்துறை சார்பில் மலைவாழ் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பக பகுதியான வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் ஏராளமான மலைவாழ் மக்கள் உள்ளனர். அவர்கள் தங்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இதையடுத்து காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்படி துணை கள இயக்குனர் கணேசன் அறிவுரையின் பேரில் வனச்சரகர் மணிகண்டன் மேற்பார்வையில் நெடுங்குன்று, பாலகிணாறு, வெள்ளிமுடி, கீழ்பூணாச்சி, சங்கரன்குடி, உடுமன்பாறை, பரமன்கடவு, சிங்கோனா, கவர்க்கல் ஆகிய மலைவாழ் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்கும் பணி நடந்து வருகிறது. 

அதன்படி நெடுங்குன்று மலைவாழ் கிராமத்தில் பணிகள் முடிந்து குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பிற இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது. 

அந்த பணிகள் விரைவில் முடிந்து விடும். எனவே குடிநீர் வசதி செய்ய நடவடிக்ைக எடுத்த வனத்துறையினருக்கு பழங்குடியின சங்க நிர்வாகி ரவி மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். 


Next Story