மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்


மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 5 April 2022 11:21 PM IST (Updated: 5 April 2022 11:21 PM IST)
t-max-icont-min-icon

எட்டிமடை அருகே மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எட்டிமடை

கோவையை அடுத்த எட்டிமடை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், கோவை தெற்கு ஆர்.டி.ஓ. இளங்கோ கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். 

 இதுகுறித்து அவர் கூறும்போது, எட்டிமடை பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் சாதி சான்றிதழ்கள், முதியோர் உதவித் தொகைகள், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை பதிவுகள், பிறப்பு சான்று திருத்தம், பட்டா மாறுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் 55 பேருக்கு வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், மதுக்கரை தாசில்தார் பர்சானா, சமூகப்பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் திருபுரசுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் ராமலட்சுமி, வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி, கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story