ரூ.30½ லட்சம் செல்போன் டவர், உதிரிபாகங்கள் திருட்டு


ரூ.30½ லட்சம் செல்போன் டவர், உதிரிபாகங்கள் திருட்டு
x
ரூ.30½ லட்சம் செல்போன் டவர், உதிரிபாகங்கள் திருட்டு
தினத்தந்தி 6 April 2022 9:16 PM IST (Updated: 6 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

ரூ.30½ லட்சம் செல்போன் டவர், உதிரிபாகங்கள் திருட்டு

இடிகரை

கோவை சாய்பாபாகாலனியை அடுத்த வேலாண்டிபாளையம் தடாகம் ரோட்டில் உள்ள பெரியகாளி கோனார் தெருவில் பிரபல செல்போன் நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த டவர் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


ஏரியா மேலாளர் சிவபாலன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான  டவர்களை ஆய்வு செய்தபோது சாய்பாபாகாலனி பகுதியில்  உள்ள செல்போன் டவர் மற்றும் அதன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் சிறிது, சிறிதாக திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

திருட்டுபோன செல்போன் டவர், உதிரிபாகங்களின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்து 58 ஆயிரத்து 552 ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த சிவபாலன் தங்களது நிறவன உயர் அகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் இது குறித்து சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

 அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை வலை வீசிதேடி வருகின்றனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் நடமாட்டம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் டவர் திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story