ஆனைமலையில் காணாமல் போன சிறுமிகள் பொள்ளாச்சியில் மீட்பு


ஆனைமலையில் காணாமல் போன சிறுமிகள் பொள்ளாச்சியில் மீட்பு
x
தினத்தந்தி 6 April 2022 9:16 PM IST (Updated: 6 April 2022 9:16 PM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் காணாமல் போன சிறுமிகள் பொள்ளாச்சியில் மீட்கப்பட்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 14 மற்றும் 17 வயது சிறுமிகள் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றனர். ஆனால் வெகுநேரமாகியும் காணாமல் போனதால் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பஸ்சில் வெளியூர் செல்வதை தடுக்க பொள்ளாச்சி நகர மேற்கு, கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்ற சிறுமிகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

விசாரணையில் ஆனைமலையில் இருந்து வந்து வெளியூர் செல்வதற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆனைமலை போலீசாரிடம் சிறுமிகளை ஒப்படைத்தனர். பின்னர் பெற்றோர் வரவழைக்கப்பட்டு உரிய அறிவுரை கூறி போலீசார் சிறுமிகளை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் புகார் கொடுத்த ஒரு மணி நேரத்தில் சிறுமிகளை பத்திரமாக மீட்ட போலீசாரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.

Next Story