ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.89 ஆயிரம் அபேஸ்


ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.89 ஆயிரம் அபேஸ்
x
தினத்தந்தி 6 April 2022 10:31 PM IST (Updated: 6 April 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி ஊழியர் வங்கி கணக்கில் ரூ.89 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரி பாலாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் விஜயசேகரன் (வயது 62). இவர் பெங்களூருவில் உள்ள ரிசர்வ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், உங்களது வங்கி கணக்கு விவரங்கள் அப்டேட் செய்ய வேண்டும். எனவே வங்கி தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும், எனக் கூறியிருந்தது.

அந்தக் குறுந்தகவல் வங்கியில் இருந்து அனுப்பப்பட்டதாகக் கருதிய விஜயசேகரன் குறுந்தகவலில் இருந்த இணையதள லிங்கில் சென்று தனது வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவரது வங்கியில் இருந்து ரூ.89 ஆயிரத்து 963 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்டு கேட்டார். அப்போதுதான் குறுந்தகவல் வங்கியில் இருந்து அனுப்பப்படவில்லை என்றும் மர்மநபர் அனுப்பியது என்றும் அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story