பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி
பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாலக்கோடு:
பாலக்கோடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தக்காளி சாகுபடி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இவர்கள் அறுவடை செய்யும் தக்காளியை பாலக்கோடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு இருந்து தக்காளியை வியாபாரிகள் வாங்கி கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வருகின்றனர்.
பாலக்கோடு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.3-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் தக்காளியை சாலையோரம் கொட்டி சென்றனர். பலர் தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டதால் வெயிலுக்கு கருகின.
விலை உயர்வு
இந்தநிலையில் வெயில் காரணமாக பாலக்கோடு பகுதியில் தக்காளி சாகுபடி குறையத்தொடங்கியது. மேலும் ஆந்திரா, நாசிக் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.12 வரை விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story