மணமேல்குடி அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மணமேல்குடி அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மணமேல்குடி:
மணமேல்குடி அடுத்த மும்பாலை சோதனை சாவடியில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் 12 மூட்டைகளாக 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் ரேஷன் அரிசி கடத்தியது மீமிசல் அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சாகுல் ஹமீதை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story