ஆற்காடு அருகே தனியார் நிறுவனத்தில் ரூ90 ஆயிரம் மோசடி செய்த ஊழியர் கைது


ஆற்காடு அருகே  தனியார் நிறுவனத்தில் ரூ90 ஆயிரம் மோசடி செய்த ஊழியர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 12:15 AM IST (Updated: 7 April 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.90 ஆயிரம் மோசடி செய்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு

திருச்சி மாவட்டம் திருெவறும்புதூர் தாலுகாவை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 53). இவர் ஆற்காடு அடுத்த புதுப்பாடியில் உள்ள தனியார் ஆயில் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சென்னையில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தில் இருந்து ரூ.90 ஆயிரத்தை கம்பெனியில் வேலை செய்யும் சக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பிரான்சிஸ் இடம் இரண்டு மாதங்களுக்கு முன்புகொடுத்துள்ளனர். ஆனால் அதனை சக ஊழியர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. 

 இதுகுறித்து கம்பெனி மேலாளர் மனோகரன் ஆற்காடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் பிரான்சிஸ் ரூ.90 ஆயிரத்தை மோசடி செய்துவிட்டதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ்சை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story