சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 7 April 2022 1:20 AM IST (Updated: 7 April 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மணிகண்டம், ஏப்.7-
மணிகண்டம் அருகே மேலப்பாகனூர் கிராமத்தில்  தானா முளைத்த சுயம்பு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்தி விநாயகர்,  மகா காளியம்மன், பகவதி அம்மன், ஐயனார், ஒண்டிகருப்பர், சிவன், நாகநாதர், நவக்கிரகங்கள் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு யாகசாலை பூஜைகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. முன்னதாக காலை 9.15 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் குடங்களை ஊர் முக்கியஸ்தர்கள், சிவாச்சாரியர்கள் ஆகியோர் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றிவந்து அந்தந்த கோவில் கோபுர கலசங்களுக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் வேதமந்திரங்கள் முழங்க கருடபகவான் தரிசனத்திற்கு பின்னர் சுயம்பு முத்துமாரியம்மன், காளியம்மன், விநாயகர், பகவதிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையடுத்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மணிகண்டம் ஒன்றிய குழுத்தலைவர் கமலம்கருப்பையா, ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் மேலப்பாகனூர், கீழப்பாகனூர், நடுபாகனூர், சன்னாசிப்பட்டி, மணிகண்டம், நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story