டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை; மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல்


டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை; மந்திரிசபை விரிவாக்கத்திற்கு ஒப்புதல்
x
தினத்தந்தி 7 April 2022 2:44 AM IST (Updated: 7 April 2022 2:44 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மந்திரிசபை விாிவாக்கத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

மந்திரிசபை விரிவாக்கம்

  பா.ஜனதா நிறுவன தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட முன்னணி தலைவலர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டாவை பசவராஜ் பொம்மை சந்தித்து 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும் கலந்து கொண்டார்.

  இந்த ஆலோசனையின்போது, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மந்திரிசபையை விஸ்தரிக்க முதல்-மந்திரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மந்திரிசபை விரிவாக்கமா? அல்லது மந்திரிசபை மாற்றி அமைப்பா? என்பது பற்றி தெளிவான தகவல் வெளியாகவில்லை. மந்திரிசபையை மாற்றினால் தற்போது உள்ள மந்திரிகளில் 10 முதல் 12 பேர் வரை நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

விஜயேந்திரா-ரேணுகாச்சார்யா

  அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, ரேணுகாச்சார்யா, திப்பாரெட்டி உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பல புதிய முகங்களுக்கும் இடம் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அடுத்த சில நாட்களில் இந்த மாற்றம் நடைபெற உள்ளது. மந்திரிசபையில் தற்போது 4 இடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் 10 மந்திரிகளை நீக்கினால் 15 பேர் புதிய மந்திரிகளாக நியமகிக்கப்பட உள்ளனர்.

Next Story