ஊரப்பாக்கம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலி
ஊரப்பாக்கம் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து கூலித்தொழிலாளி பலியானார். 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆட்டோ கவிழ்ந்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் இருந்து மினி சரக்கு ஆட்டோவில் 13 பேருடன் நுங்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னை அசோக் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஊரப்பாக்கம் அருகே நள்ளிரவில் வரும்போது திடீரென மினி சரக்கு ஆட்டோவின் டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சரக்கு ஆட்டோ சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாவு
இதில் ஆட்டோவில் மேற்பகுதியில் அமர்ந்திருந்த அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 46) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 12 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story