பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளா் பலி


பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளா் பலி
x
தினத்தந்தி 7 April 2022 7:00 PM IST (Updated: 7 April 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளா் பரிதாபமாக இறந்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளா் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஓட்டல் உரிமையாளர்

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 67). இவர் ஓட்டல் உரிமையாளர். இந்த நிலையில் அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவரை பார்த்து, மீண்டும் கோட்டூர் செல்வதற்கு பழைய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் தேநீர் குடிப்பதற்கு பஸ் நிலைய நுழைவு வாயில் முன் நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

பரிதாப சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் சுப்பையன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அரசு பஸ் டிரைவர் சக்திவேல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story