பொள்ளாச்சி அருகே மினி லாரி தீப்பிடித்து எரிந்தது
பொள்ளாச்சி அருகே மினி லாரி தீப்பிடித்து எரிந்தது.
பொள்ளாச்சி
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு மினி லாரி பொள்ளாச்சி அருகே உள்ள ஆவல்சின்னாம்பாளையத்திற்கு வந்து கொண்டிருந்தது. லாரியை வேடசந்தூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் வைக்கோல் இறக்க வேண்டிய தோட்டத்தின் அருகில் வந்த போது மின்சார ஓயரில் வைக்கோல் உரசியதாக தெரிகிறது. இதனால் மினி லாரியின் மீது இருந்த வைக்கோல் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையத்து அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மினி லாரி லேசான சேதமடைந்தது. மேலும் வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கோட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story