கிணத்துக்கடவு அருகே மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு அருகே மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கும்பாபிஷேக விழா கடந்த 3-ந் தேதி காலை விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோம பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாரதனை நடைபெற்றது. மாலை வாஸ்துசாந்தி நடந்தது. 4-ந்தேதி காலை அக்னி சங்க்ர கஹணம், புதிய மூர்த்திகள், யாகசாலை அலங்காரம் நடைபெற்றது. பின்னர் யாகசாலை பிரவேசம் தேவார இன்னிசையுடன் முதற்கால யாக பூஜை நடைபெற்றது. 5-ந்தேதி 2-ம் கால யாகபூஜை நடந்தது.. மாலை 3-ம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. மங்கல இசையுடன் 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஸ்ரீ மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு மேளதாளம் முழங்க ஆச்சாரியார்கள் புனிதநீர் கலசத்தை தலையில் சுமந்து வந்து கோபுர உச்சிக்கு கொண்டு சென்றனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






