பொள்ளாச்சியில் ரெயில்வே மேம்பாலம் திறப்பு
பொள்ளாச்சியில் ரூ.52½ கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் ரூ.52½ கோடியில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டது.இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேம்பாலம் திறப்பு
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு பாலக்காடு சாலை வழியாக தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வடுகபாளையம் ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வரும்போது கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பை தடுக்க நிலம் எடுப்பு, மேம்பால பணிகளுக்கு ரூ.52 கோடியே 47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாலம் கட்டும் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது. இந்த நிலையில் பாலம் பணிகள் முழுமையாக முடிந்து திறப்பு விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
பாலம் பணிகள் நடைபெற்று வந்ததால் லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஜமீன்ஊத்துக்குளி வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் வரை சுற்றி பாலக்காடு ரோட்டை அடைந்தன. இந்த நிலையில் பாலம் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவில் ரூ.52 கோடியே 47 லட்சம் செலவில் 810.25 மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையுடன் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்கிடையில் கொரோனா தொற்று காரணமாக பணிகள் தாமதமாகியது. தற்போது பாலம் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டு உள்ளது. இதை தவிர 5 ½ மீட்டர் அகலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டு உள்ளது. வீடுகள், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எளிதில் செல்லும் வகையில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story