முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி


முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 April 2022 7:14 PM IST (Updated: 7 April 2022 7:14 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஊட்டி

நீலகிரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், பள்ளி கல்வித்துறையின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்கல்வி, தொழில், வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி பயிற்சி முகாம், ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. முகாமை பயிற்சி நிறுவன முதல்வர் ரமேஷ் தொடங்கி வைத்தார். கருத்தாளர்கள் சுரேஷ், வசந்தாமணி ஆகியோர் முதுகலை ஆசிரியர்களுக்கு இறுக்கம் தளர் செயல்பாடுகள், நம்மை நாமே புரிந்து கொள்ளுதல், வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன்கள், உயர்கல்வி படிப்புகள், நுழைவுத்தேர்வுகள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் குறித்து விளக்கி கூறினர். 

மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பின்னர் உயர்கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் பெறுவது குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த உயர்கல்வி அல்லது தொழிலை தேர்வு செய்து வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றனர். பயிற்சி முகாமில் முதுகலை ஆசிரியர்கள் 41 பேர் கலந்துகொண்டனர்.


Next Story