வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்


வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2022 7:20 PM IST (Updated: 7 April 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று ஓவேலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூடலூர்

சட்டப்பிரிவு-17 வகை நிலத்தில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று ஓவேலி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

பேரூராட்சி கூட்டம்

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி மன்ற முதல் கூட்டம், அங்குள்ள அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சித்ராதேவி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ஹரிதாஸ், துணை தலைவர் சகாதேவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வளாச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து மன்ற பொருட்கள் வாசிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போடப்பட்ட நடைபாதைகள், சிமெண்டு மற்றும் தார் சாலைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் பல ஆண்டுகளாக பராமரிக்காமல் மிகவும் பழுதடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை சீரமைக்க வேண்டும். 

மின் இணைப்பு

இது தவிர பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு கதவு எண்கள் வழங்கபடாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே வீடுகள், கட்டிடங்களுக்கு கதவு எண்கள் வழங்க வேண்டும். 

சட்டப்பிரிவு-17 நிலத்தில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை பட்டா இல்லாமலும், வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பட்டா, மின் இணைப்பு வழங்க ஆவன செய்ய வேண்டும் என்று  தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story