சோலையாறு அணை நீர்மட்டம் 22 அடியாக சரிந்தது
வால்பாைறயில் கொளுத்தும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 22 அடியாக சரிந்தது.
வால்பாறை
வால்பாைறயில் கொளுத்தும் வெயில் காரணமாக சோலையாறு அணை நீர்மட்டம் 22 அடியாக சரிந்தது.
கொளுத்தும் வெயில்
வால்பாறையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. ஆனால் கடந்த கடந்த 18-ந்தேதி முதல் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. ஒருசில சமயங்களில் இடியுடன் கூடிய கனமழையாகவும் பல சமயங்களில் மிதமான மழையாகவும் பெய்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக ஒருசில எஸ்டேட் பகுதியில் மட்டும் மழை பெய்தது. பல எஸ்டேட் பகுதிகள் மற்றும் வால்பாறை நகரில் மழை இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வால்பாறை நகரில் லேசான மழை பெய்தது. ஆனால் சுற்று வட்டார பகுதி முழுவதும், பல்வேறு எஸ்டேட் பகுதியில் பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் ஆறுகளுக்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை.
22 அடியாக சரிந்தது
கோடை வெயில் காரணமாக கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் சோலையாறு அணை, நீரார் அணை மற்றும் ஆறுகளிலும் தண்ணீர் மிகவும் குறைந்து விட்டது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் தற்போது 22 அடியாக உள்ளது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. மின் உற்பத்தி செய்யப்படாமல் மாற்று பாதை வழியாக 30 கன அடி நீர், பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. கோடைமழையும் ஒருசில சமயத்தில் மட்டுமே பெய்து வருகிறது. இதனால் பகலில் கொளுத்தும் வெயில் காரணமாக மழைநீர் விரைவில் வறண்டு விடுகிறது. வருகிற நாட்கள் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் நிலையுள்ளதால் வறட்சியின் பாதிப்பு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே வருகிற ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை கிடைக்கும் வரை வறட்சியால் வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிப்பு, தேயிலை செடிகளை தாக்கும் நோய் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலையில் நிலவி வருகிறது என்று தேயிலை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story