கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மே.காட்டுக்குளம் பகுதியில் உள்ள செவரப்பூண்டிகூட்டுரோடு அருகில் வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தனிப்படையைச்சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் சத்யானந்தம் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர், அவலூர்பேட்டையை சேர்ந்த சரவணன் மகன் பாண்டியன் (வயது 20) என்பதும், அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பையை சோதித்ததில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை கஞ்சாவுடன் கீழ்பென்னாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தார்.
Related Tags :
Next Story