சாராயம் கடத்திய 2 பேர் கைது
கொள்ளிடத்தில் சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
கொள்ளிடம்
கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர்அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் மற்றும் போலீசார் கொள்ளிடம் அருகே பனங்காட்டாங்குடி மெயின் சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் மூட்டைகளுடன் 3 பேர் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில் ஒருவர் தப்பி ஓடி விட்டார்.
இதனால், மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார் சைக்கிள்களில் கொண்டு வரப்பட்ட மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில், காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது.
2 பேர் கைது
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள்
மணல்மேடு அருகே உள்ள மண்ணிபள்ளம் கிராமம் மந்தை கோவில் தெருவை சேர்ந்த ஞானம் மகன் திலிப்குமார் (வயது 35) மற்றும் தரங்கம்பாடி அருகே உள்ள ஆயர்பாடி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த செல்வகுமாரன் மகன் முருகேசன் (22) என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், 750 பாட்டில்களில் அவர்கள் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயத்தையும், 1,400 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் இருந்த 140 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியயவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடத்தி வரப்பட்ட சாராயத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Related Tags :
Next Story