புகழிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை


புகழிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 7 April 2022 10:36 PM IST (Updated: 7 April 2022 10:36 PM IST)
t-max-icont-min-icon

சஷ்டியையொட்டி புகழிமலை முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

வேலாயுதம்பாளையம், 
வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மலர்களால் சுப்பிரமணியர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. சஷ்டி விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள் மலையை சுற்றி வந்து, முருகனை வழிபட்டனர். இதேபோல் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியர், வெண்ணெய்மலை முருகன் ஆகிய கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Next Story