ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு. பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்
ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளனர். ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றக்கோரி நோட்டீஸ் வழங்கியும் அகற்றாததால், நகராட்சி அதிகாரிகளே ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டிடங்களை இடிக்க வந்தபோது பெண் ஒருவர் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும் அ.தி.முக., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் கட்டிடங்களை அப்புறப்படுத்த பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இடிக்க முயன்றபோது அப்பகுதியில் குடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தலிங்கம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, மண்டல துணை தாசில்தார் ரேவதி, முதன்மை நில அளவையர் ரவி உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வீடு ஒதுக்கி தர கடிதம் கொடுக்குமாறு மனு அளிக்க கோரினார்கள். அதன்படி மனு கொடுத்ததும் மனுவை பெற்றுக்கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் முழுமையாக அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story