வியாபாரிகள் சங்கம் சார்பில் கீரனூரில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு


வியாபாரிகள் சங்கம் சார்பில்  கீரனூரில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
x
தினத்தந்தி 7 April 2022 11:25 PM IST (Updated: 7 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

கீரனூரில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

கீரனூர்:
கீரனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகால வெப்பம் தொடங்கி நாளுக்குநாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலினால் மக்கள் நடமாட்டம் குறைந்து கடைவீதி வெறிச்சோடி காணப்படுகிறது. கோடைகால வெப்பத்தை சமாளிக்கும் விதமாக பொதுமக்களுக்கு கீரனூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மோர், இனிப்பு பானம் முதலியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story