மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்


மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும்
x
தினத்தந்தி 7 April 2022 11:34 PM IST (Updated: 7 April 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் என கி.வீரமணி கூறினார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:- ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் என்று கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையில் ஒரு முறை அல்ல பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அரசுகள் மாறினாலும் தமிழக அரசு ஒரே நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. உச்சநீதிமன்றமே ஏன், கவர்னர் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்ப தாமதிக்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே அவர்களுக்கு பரோல், மற்றும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர். நெருக்கடியில் உள்ள இலங்கை அரசுக்கு இந்திய அரசு உதவுகிறது. ஆனால் தங்களின் குடிமக்களான தமிழக மீனவர்களை காப்பாற்றவோ அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கவோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் சிறப்பு கவனம் செலுத்தி மத்திய அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மீனவர்களை தாக்கி கைது செய்யக்கூடாது என்று இலங்கையிடம் மத்திய வலியுறுத்த வேண்டும். இதற்கு நிரந்தரமான தீர்வு காண கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும். இதற்காக திராவிடர் கழகம் சார்பில் ராமேசுவரத்தில் அனைத்து கட்சியினரும் சேர்ந்து மாநாடு நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தப்படும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவியேற்றதும் மீன்வளம் என்பதை மீனவர்நலன் என்று மாற்றி மாநில எல்லைக்குட்பட்டு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ செய்து வருகிறார். தற்போதைய சூழ்நிலையில் மீனவர் பிரச்சினைக்கு மத்திய அரசு எளிதில் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறினார்.


Next Story