தங்கச்சிமடத்தில் 19-ந் தேதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்
தங்கச்சிமடத்தில் 19-ந் தேதி மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளனர்.
ராமேசுவரம்,
தங்கச்சிமடம் புனித யாகப்பர் பள்ளி வளாகத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசூராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க ஒவ்வொரு மீனவருக்கும் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற 19-ந் தேதி தங்கச்சிமடத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story