உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆற்காடு மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராணிப்பேட்டை
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் உள்ள ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் நர்சிங் கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
லட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் பாலாஜி லோகநாதன் தலைமை தாங்கினார்.
நர்சிங் கல்லூரி மாணவிகள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் வராமல் தடுப்பது குறித்தும், ஆரோக்கியமாக இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.
அதேபோல், ஜி.வி. மருத்துவமனையிலும் டாக்டர் அருண் தலைமையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மருத்துவமனைக்கு வருகை புரிந்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகள், சத்தான உணவுகளை எடுத்து கொள்வதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சி.எஸ்.சிவசக்தி, துணை முதல்வர் ஞானதீபா மற்றும் மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை செயலாளர் சாந்தி பாலாஜி, தாளாளர் கோமதி, இணைச் செயலாளர் பி.வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






