காசநோய் விழிப்புணர்வு முகாம்


காசநோய் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 8 April 2022 12:29 AM IST (Updated: 8 April 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

காசநோய் விழிப்புணர்வு முகாம் மரவாபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.

நொய்யல், 
கரூர் மாவட்டம் மரவாபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காசநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். காசநோய் திட்ட மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் சுவாதி ஆகியோர் கொண்ட குழுவினர் காசநோயின் ஆரம்ப அறிகுறிகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்து கூறினார்கள். மேலும், காசநோயாளிகளை ஒதுக்கி வைக்கக்கூடாது. அவர்களை அரவணைத்து ஆறுதல் கூற வேண்டும். காசநோய் ஒழிப்பில் அனைவரும் தங்களால் இயன்ற அனைத்து அணுகு முறைகளையும் மேற்கொண்டு காசநோய்களை முற்றிலும் அழித்திடவும், காசநோய் இல்லாத தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினர்.

Next Story