முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்


முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 8 April 2022 1:41 AM IST (Updated: 8 April 2022 1:41 AM IST)
t-max-icont-min-icon

புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

பெத்தநாயக்கன்பாளையம்:-
புத்திரகவுண்டன்பாளையத்தில் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயரத்தில் உலகிலேயே உயரமான முருகன் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது  லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஹெலிகாப்டரில் மலர்தூவப்பட்டது. கும்பாபிஷேக விழாவின் தொடர்ச்சியாக நேற்று முருகனுக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வந்து திருமாங்கல்யம் வைத்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிறுவனர் ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமையில் இந்த உற்சவம் நடைபெற்றது. அதன்பின்னர் பல்லக்கில் சாமி திருவீதி உலா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story